முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரி மலையில் கூடாரம் போட்டு தங்கும் பக்தர்கள்

செவ்வாய்க்கிழமை, 22 டிசம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

 திருவனந்த புரம் -  சபரி மலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27ம் தேதியன்று பகல் 12.30மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது,
இந்த மண்டல பூஜை  நாளன்று ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த காட்சியை தரிசனம் செய்வதற்கு  சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.  அங்கு சென்றுள்ள பக்தர்கள் மண்டல பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என அங்கு கூடாரம் போட்டு தங்கி இருக்கிறார்கள்.

சிறியானா வட்டம், பம்பை ஆகிய இடங்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடாரம் அமைத்து இருக்கிறார்கள். தற்போது சபரிமலையில் மழை குறைந்துள்ளது. இருப்பினும் பம்பை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடுகிறது. எனவே பம்பை நதியில் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

சபரி மலைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அதிகாலை 3மணி முதல்  காலை 11மணி வரை நடைபெற்று வந்த நெய் அபிஷேகம் நேரம் பகல் 12.30மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கும் நேரமும் அரை மணி நேரம் கூடுதலாக திறந்திருக்க நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது. சபரி மலையில் பல லட்சம் பக்தர்கள் குவிவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்