முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்புவுக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்பு!

செவ்வாய்க்கிழமை, 22 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - ஆபாச பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தி பாடல் வெளியான விவகாரத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடந்த 12-ஆம் தேதி புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, சிம்பு, அனிருத் மீது பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், டிசம்பர் 19-ஆம் தேதி இருவரும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை (சம்மன்) அனுப்பியிருந்தனர். இருவரும் அவகாசம் கேட்டு காவல்துறைக்குக் கடிதம் எழுதினார்கள்.இந்நிலையில் சிம்பு, அனிருத் ஆகிய இருவரும் ஜனவரி 2-ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார் சிம்பு. இந்த மனு தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது.சிம்புவுக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. பீப் பாடல் பரவுவதைத் தடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. முன்ஜாமீன் வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று அரசு தெரிவித்தது. பீப் பாடல் பரவுவதைத் தடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்