முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு தடைக்கு தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரசே காரணம்: நாடகம் அம்பலமானதால் போராட்டத்தை தள்ளிவைத்து கருணாநிதி ஸ்டண்ட்

வெள்ளிக்கிழமை, 25 டிசம்பர் 2015      அரசியல்
Image Unavailable

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதே மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோதுதான். ஆனால் அப்போதெல்லாம் மவுனம் சாதித்த கருணாநிதி, இப்போது ஜல்லிக்கட்டை கையில் எடுத்துக் கொண்டு ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம் என்ற உண்மை தற்போது வெளியாகி விட்டதால் தனது போராட்டத்தையும் தள்ளி வைத்து மற்றொரு ஸ்டண்ட் அடித்துள்ளார் கருணாநிதி.

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் மிகுந்த வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் நிகழ்ச்சி. இந்த வீர விளையாட்டு தமிழகத்தில் புகழ் பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களிலும் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்டு வந்தது. வீரம் மிகுந்த இளம் காளையர்கள் சீறீப் பாய்ந்து வரும் காளைகளை விரட்டிச் சென்று அவற்றை அடக்கும் அழகே அழகு. அதைக் காண கண்கோடி வேண்டும். இந்த வீர விளையாட்டை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கூட பார்த்து ரசித்து வந்தார்கள். அப்படிப்பட்ட வீர விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டுக்கு முந்தைய தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் ஆபத்து வந்தது. விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட பட்டியலில் காளையும் சேர்க்கப்பட்டது.

மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அதை தொடர்ந்து நடத்த தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் இன்றளவும் போராடி வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் தி.மு.க. இந்த விஷயத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. காரணம் ஜல்லிக்கட்டை தடை செய்யக் காரணமாக இருந்ததே மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசுதான். அப்போது தி.மு.க.வும் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. அப்போதெல்லாம் மவுனமாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இப்போது ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஸ்டண்ட் அடிக்கிறார். இது மட்டுமல்ல மன்மோகன்சிங் அரசு எடுத்த சில தவறான முடிவுகளை எல்லாம் தனது சுயநலத்துக்காக கண்டும் காணாமல் இருந்தவர்தான் கருணாநிதி.

பல ஆண்டுகளுக்கு முன்பு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்க அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முடிவு செய்தபோது சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் சாதித்தவர்தான் இந்த கருணாநிதி. அதேபோல மன்மோகன்சிங் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தபோது எதிர்த்து போராடாத கருணாநிதி, இப்போது போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். அதையும் கூட தற்காலிகமாக தள்ளிவைத்து நாடகமாடுகிறார் கருணாநிதி.

தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளை காப்பதற்கென்றே பிறந்தவர் முதல்வர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை போன்றவற்றில் சட்டப் போராட்டம் நடத்தி அவற்றில் வெற்றி கண்டு தமிழக விவசாயிகளின் உரிமை காத்தவர் ஜெயலலிதா. மத்திய அரசுக்கு அஞ்சாமல் எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடியவர். காங்கிரஸ் அரசை எதிர்த்து நின்று போராடி பல விஷயங்களில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. இந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அவரது இந்த யோசனை மூலம் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

நிலைமை இவ்வாறாக இருக்க, கருணாநிதியோ ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டண்ட் அடிக்கிறார். தடை வரக் காரணமாக இருந்த காங்கிரஸ் ஆட்சியை கண்டிக்கத் தவறி விட்டு இப்போது வாய்கிழிய பேசுகிறார். இவரது கபட நாடகத்தை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்