முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 27 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை : சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் ‘வசந்தம்’ அணியின் சார்பாக போட்டியிட்ட சிவன் சீனிவாசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சின்னத்திரை நடிகர் சங்கத்துக் கான தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் ‘வசந்தம்’ அணி யின் சார்பில் போட்டியிட்ட சிவன் சீனிவாசன் 280 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரவிவர்மா 207 வாக்குகளும், பானு பிரகாஷ் 202 வாக்குகளும் பெற்றனர்.

இந்த தேர்தலில் சின்னத்திரை நடிகர் சங்க செயலாளராக போஸ் வெங்கட், பொருளாளராக சரத் கல்யாண், துணைத் தலைவர்களாக கமலேஷ் மற்றும் வி.சோனியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்