முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீப் பாடல் சர்ச்சை விவகாரத்தை சிம்பு சட்டப்படி சந்திப்பார் டி.ராஜேந்தர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 27 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை : பீப் பாடல் சர்ச்சை விவகாரத்தை சிம்பு சட்டப்படி சந்திப்பார் என்று அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இணையதளத்தில் பீப் பாடல் வெளியிட்டதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு நேற்று காலை நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குனரு மான டி.ராஜேந்தர் வருகை தந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பின் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என் மகன் சிம்பு நடித்த வாலு திரைப்படத்திற்கு பல்வேறு வழக்கு கள் போடப்பட்டதையடுத்து காஞ்சி புரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டேன். அந்த படத்தின் பிரச்சினைகள் சுமூகமாக தீர்ந்து படம் வெளியானது. எனக்கு தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளது. செய்யாத குற்றத்திற்காக இன்றைக்கு என் மகன் குற்றவாளியாக இருக்கிறான். இந்த பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டி இன்று நான் சுவாமி தரிசனம் செய்தேன்.பல்வேறு பிரச்சினைகள் வந்த போதும் ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும், வாட்ஸ் அப் மூலம் உஷா ராஜேந்தர் பேச்சை கேட்டு தமிழகம் முழுவதும் ஆதரவுக்கரம் நீட்டிய தாய்மார்கள் மற்றும் மகளிர் அமைப்பு களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.சிம்பு எங்கும் ஓடி ஒழியவில்லை. அவர் தமிழகத்தில் தான் இருக்கிறார். அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை சட்டப்படி சந்திப்பார். எங்களுக்காக குரல் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago