முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் லாரி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக்: கியாஸ் தட்டுப்பாடு அபாயம்

திங்கட்கிழமை, 28 டிசம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னையை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் உள்ளது.இங்கிருந்து மணலி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள எரிவாயு நிரப்பும் இடங்களுக்கு 500–க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் கியாஸ் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.கடந்த வாரம் முசிறியை அடுத்த கொள்ளக்குடியை சேர்ந்த டிரைவர் சரவணன் ஐதராபாத், சரளப்பள்ளியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு டேங்கர் லாரி ஓட்டிச் சென்றார்.அப்போது கார் மீது லாரி உரசியதால் ஏற்பட்ட தகராறில் சரவணன் தாக்கப்பட்டார்.

பலத்த காயம் அடைந்த அவர் கடந்த 21–ந் தேதி சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் இறந்தார்.ஆனால் அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை.இதனை கண்டித்தும், பலியான சரவணன் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், டேங்கர் லாரி டிரைவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டேங்கர் லாரி டிரைவர்கள் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் இன்று முதல் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்களது லாரிகளை ஆயில் நிறுவன வளாகம், வட சென்னை அனல்மின் நிலைய சாலையில் வரிசையாக நிறுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்கால் எரிவாயு நிரப்பும் இடங்களுக்கு கியாஸ் கொண்டு செல்வது முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. லாரி ஸ்டிரைக் நீடித்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது.இதையடுத்து லாரி டிரைவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்