முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுநிலை மருத்துவ நுழைவுத்தேர்வை சென்னையில் நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழிசை கடிதம்

செவ்வாய்க்கிழமை, 29 டிசம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய சுகாதார மந்திரிக்கு அனுப்பி உள்ள அவசர கடிதத்தில் கூறி இருப்பதாவது:–

ஆண்டுதோறும் சென்னையில் 5 மையங்களில் நடந்து வரும் அகில இந்திய மேல்படிப்பு நுழைவு தேர்வு இந்த ஆண்டு பெண்களுக்கான ஒரு மையம் என்று சுருக்கப்பட்டுள்ளதால் சுமார் 5 ஆயிரம் இளம் டாக்டர்கள் பிற மாநிலம் செல்ல வேண்டியுள்ளதால் அவர்களுக்கு பெரும் அவதியும் சுமையும் ஏற்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.அகில இந்திய அளவில் மருத்துவ தலைநகரம் என கருதப்படும் சென்னையை சுற்றிலும் 15 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகிறது. உடனே இத்தேர்வை போர்கால அடிப்படையில் விரைந்து சென்னையில் நடத்த அவசர கால நடவடிக்கை எடுத்து உதவ வேண்டுகிறேன்.தமிழக அரசின் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகம் இப்பிரச்சனையில் முனைப்போடு திட்டமிட்டு உரிய நேரத்தில் சரிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் மருத்துவ மாணவர்களுக்கு சரியான கால அவகாசத்துடன் நன்மை கிடைத்திருக்கும் என்ற கருத்தையும் கவனத்தில் கொண்டு இன்னமும் ஜனவரி 11–க்கு கால அவகாசம் இருப்பதால் தமிழக அரசும் விரைந்து செயல்பட்டு இப்போது கூட சென்னையில் நடத்த முன்னேற்பாடு வசதிகளை செய்ய தயார் என்ற நிலைப்பாடு உடன் மத்திய அரசுக்கு தெரிவித்தால் நல்லது நடக்கும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்