முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் தொடர்ந்து 5-வது முறையாக மெகா லட்டு படைத்து சாதனை

புதன்கிழமை, 30 டிசம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

ஐதராபாத் - ஆந்திராவில் தொடர்ந்து 5-வது முறையாக மெகா லட்டு படைக்கப்பட்டது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த லட்டின் மொத்த எடை 8 டன் ஆகும். ஆந்திர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தயாரித்த 8 டன் எடை கொண்ட மெகா லட்டு பிரசாதம் இந்த ஆண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் தாபேஸ்வரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ் உரிமையாளர் வெங்கடேஸ்வர ராவ்,

கடந்த 5 ஆண்டுகளாக ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய நகரங்களில் விநாயக சதுர்த்திக்கு மெகா லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்கி வருகிறார். இவர் கடந்த 2011-ம் ஆண்டில் 5,570 கிலோ, 2012-ல், 6,599 கிலோ, 2013-ல் 7,132 கிலோ, 2014-ல் 7,858 கிலோ எடை கொண்ட லட்டு பிரசாதங்களை தயாரித்து விநாயகர் சதுர்த்திக்கு வழங்கினார். இவை அனைத்தும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றன.

இந்த வரிசையில் இந்த ஆண்டு 8,369 கிலோ எடையில் லட்டு பிரசாதம் தயாரித்து வழங்கினார். இந்த லட்டு, விசாகப்பட்டினத்தில் காஜூவாகா பகுதியில் வைக்கப்பட்ட 80 அடி விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்டு, பின்னர் அது பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்த மெகா லட்டு பிரசாதமும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் 5 முறையாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago