முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா விவகாரம்: சோனியாவுடன் வெங்கையா நாயுடு சந்திப்பு

வியாழக்கிழமை, 7 ஜனவரி 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசிய மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு ஆதரவு கேட்டார். டெல்லியில் சோனியா காந்தி இல்லத்திற்கு சென்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கையா நாயுடு, சோனியா காந்தியை சந்தித்துபேசினார். 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் கூறிய மூன்று திருத்தங்கள் பற்றி அரசின் நிலை என்ன? என்று சோனியா காந்தி வெங்கையாநாயுடுவிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

இந்த விவகாரத்தில் அரசின் நிலையை காங்கிரஸ் தலைவர்களிடம் ஏற்கனவே கூறியிருப்பதாக நாயுடு தெரிவித்தார். மேலும் ரியல் எஸ்டேட் மசோதாவை, காங்கிரசும், பிற கட்சிகளும் விரும்பியபடி மேல்-சபை தேர்வுக்குழுவுக்கு அனுப்பியதாகவும், அந்த குழுவின் பரிந்துரை அனைத்தையும் அரசு ஏற்றுக்கொண்டதாகவும் நாயுடு கூறினார். அரசியல் கட்சிகள் ஒப்புக்கொண்டால் இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக தேவைப்பட்டால் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இதை கேட்டுக்கொண்ட சோனியா காந்தி, தனது கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து விட்டு, மீண்டும் அவரை சந்திப்பதாக நாயுடுவிடம் தெரிவித்தார்.மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால்,சரக்கு சேவை மற்றும் வரி மசோதாவை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், இம்மசோதாவில் திருத்தம் கோரி கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் பிரதான கட்சியான காங்கிரசை சரிகட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்