முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

வெள்ளிக்கிழமை, 8 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

அனந்தபூர்: இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை அனந்தபூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மாத இதழ் ஒன்றில் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப் படம் இருந்தது. இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. 'காட் ஆப் பிக் டீல்ஸ்' என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த  அட்டைப்படத்தை பார்த்த இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போல இருக்கிறது என்று  சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தோனி  மற்றும் பத்திரிகை வெளியிட்டாளர் ஆகியோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே வழக்கு ஐதராபாத் மாநிலம் அனந்தபூர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அனந்தபூர் நீதிமன்றம் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிடித்துள்ளது. வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தோனி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.  தோனி தற்போது 5 ஒருநாள் போட்டிகள் மற்றும்  மூன்று  20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இந்த கிரிக்கெட் தொடர் ஜனவரி 21 ஆம் தேதி முடிவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago