முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமீர் கானை துரோகி என கூறவில்லை: பாஜக எம்.பி மனோஜ் திவாரி மறுப்பு

சனிக்கிழமை, 9 ஜனவரி 2016      சினிமா
Image Unavailable

புதுடெல்லி - அமீர் கனை துரோகி என கூறவில்லை என்று பாரதீய ஜனதா எம்.பி மனோஜ் திவாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். வியத்தகு இந்தியாவின் தூதர்  பொறுப்பில் இருந்து அமீர் கானை நீக்கி விட்டு அமிதாப்பச்சனை நியமனம் செய்வது குறித்து சுற்றுலாத்துறை செயலரிடம் இருந்து  பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தின் போது, எம்.பிக்கள் விளக்கம் கேட்டனர்.

இந்த கூட்டத்தின் போது, அமீர் கானை துரோகி என்று பாஜக எம்.பி மனோஜ் திவாரி கூறியதாக டெல்லியில் உள்ள சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. இந்த நிலையில், அமீர் கானை துரோகி என நான் கூறியதாக வெளியான தகவல் முற்றிலும் அபத்தமானது என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இது குறித்து மனோஜ் திவாரி கூறியதாவது:-

நிலைக்குழுவில் நான் சொன்ன கருத்து என்பது ரகசியான ஒன்று. குழுவில் பேசப்பட்டதை வெளியில் சொல்வது சட்ட விரோதமான ஒன்றாகும். இருப்பினும் அமீர் கானை துரோகி என ஒருபோதும் சொல்லவில்லை. இது போன்ற வார்த்தைகளை என் வாழ்நாளில் ஒருபோதும் பிரயோகித்தது கிடையாது. தவறான செய்திகளை வெளியிட்ட செய்தித்தாள் மீது நான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளேன்.

நான் ஒரு பொறுப்புள்ள குடிமகன், இது போன்ற வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. தவறான செய்திகளை வெளியிட்டு எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க செய்தித்தாள் முற்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்