முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவதை யாரும் தடுக்க முடியாது : சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2016      ஆன்மிகம்
Image Unavailable

 புதுடெல்லி - சபரிமலை கோவிலுக்கு பெண்கள்உள்பட யாரும் சென்று வழிபாடு நடத்துவதை தடை செய்ய முடியாது என்று  சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. கேரளாவில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்சென்று வழிபட்டு வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அந்த கோவிலுக்குச்செல்கிறார்கள். அந்த கோவிலுக்கு குறிப்பிட்ட வயதுபெண்கள் சென்று வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை  சபரிமலை தேவசம் போர்டு விதித்துள்ளது.

இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை   நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட சிறப்பு அமர்வாயம் விசாரணை செய்து வருகிறது. அந்த அமர்வாயம் நேற்றைய விசாரணையின் போது  பெண்களை ஏன் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டேன் என கூறுகிறீர்கள் என்று சபரிமலை தேசம் போர்டை கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் ஆஜரான சபரிமலை தேவசம் போர்டுநிர்வாகிகள்,  கடந்த 50ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் மரபு முறையை நாங்கள் பின்பற்றி வருகிறோம். எனவே இந்த தடையை நாங்கள் மேற் கொள்வது தவறல்ல என்றனர். அப்போது நீதிபதி மிஸ்ரா கூறுகையில், கடந்த 1500 ஆண்டுகளாக சபரி மலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட வில்லை என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.சபரிமலையில்   வயது, பாலினம், மற்றும் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை அரசியலமைப்பு ஏற்பதில்லை என்று நீதிபதி மிஸ்ரா தெரிவித்தார்.அரசியலமைப்பில் பெண்கள் அந்த கோவிலில் நுழைய தடை இருந்தால்தான்  நீங்கள் அதனை கடைபிடிக்க முடியும். அரசியலமைப்பில் அதுபோன்ற தடை ஏதும் இல்லை.அவர்கள் சபரிமலை சன்னிதானத்தில்  சென்று வழிபாடு நடத்துவதை தடுக்க முடியாது என்று நீதிபதி மிஸ்ரா மேலும் கூறினார்.

இவ்வழக்கில் கேரள அரசு புதிய பிரமாணப்பத்திரத்தை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்  என்று கூறிய அமர்வாயம் இவ்வழக்கு விசாரணையை இம் மாதம் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது. சபரிமலையில் 10வயது முதல் 50வயது வரை உள்ள பெண்கள் செல்ல தடை உள்ளது. சபரி மலையில் வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.  கடந்த 1965ம்ஆண்டு கேரள அரசு பிறப்பித்த சட்டத்தில்,  சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவதற்கான தடையை விதித்து சட்டம் பிறப்பித்தது. இந்த தடை உத்தரவை கேரள உயர் நீதிமன்றமும் ஆதரித்து தீர்ப்பளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்