முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : சபரிமலை ஆச்சாரத்தை மீற மாட்டோம் கேரள அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 12 ஜனவரி 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி இல்லை. இதை அறியாமல் செல்லும் பெண்கள், பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள். இதனை கண்டித்தும், பெண்களுக்கும் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும், அவர்களுக்கு விதிக்கப்பட்டதடையை நீக்க வேண்டும் என்று இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

சுமார் 10 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஸ், என்.வி.ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து கேரள அரசுக்கும், அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் சரமாரி கேள்விகள் விடுத்தது அதில், பெண்கள் எந்த அடிப்படையில் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

பெண்களுக்கு தனிப்பட்ட உரிமைகள் இருக்கும்போது அவர்களை  தடுக்க முடியுமா? வயது, பாலினம் மற்றும் ஜாதி அடிப்படையில் பாகுபடுத்துவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் இதற்கு கேரள அரசு தகுந்த பதில் அளித்து பிரமாணப்பத்திரம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தனர். 

சபரிமலை கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த சருத்து குறித்து கேரள அறநிலையத்துறை அமைச்சர் சிவக்குமார் நிரூபர்களிடம் கூறியதாவது:- சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கென அச்சாரங்கள் உள்ளன. அரசு ஒருபோதும் அந்த ஆச்சாரங்களை மீறாது. பெண்களை அனுமதிக்க வேண்டுமென் கோர்ட்டு கூறினால் அதை எதிர்த்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்