முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கூடுதலாக ஒரு லட்டு:தேவஸ்தானம் முடிவு

சனிக்கிழமை, 16 ஜனவரி 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - ஆன்லைனில் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கூடுதலாக ஒரு லட்டு வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். அங்கு கவுன்டர்கள் மூலம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு அடிப்படையில் தற்போது ஆன்லைனில் தேவஸ்தானம் விற்பனை செய்கிறது. தங்கும் அறைகள் முன் பதிவையும் ஆன்லைனுக்கு மாற்றம் செய்துள்ளது.

இப்படி தரிசன டிக்கெட்டுகள், கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆகியவற்றை ஆன்லைனில் பெறுவதில் பக்தர்கள் காட்டும் ஆர்வத்தை சர்வே மூலம் கவனித்த தேவஸ்தான நிர்வாகம், திருமலையில் உள்ள விஜயா வங்கி கிளை மூலம் விற்பனை செய்யப்படும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளையும் அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே ஆன்லைனில் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கூடுதலாக ஒரு லட்டு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.

300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 2 இலவச லட்டும், ரூ.25 கட்டணத்தில் கூடுதலாக 1 லட்டும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் ரூ.25 விலையில் கூடுதலாக 2 லட்டு வழங்கப்படும். மகர, சங்கராந்தி முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளது. பொங்கல் தரிசன டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டதால் வருகிற திங்கட்கிழமை முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்