முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாழ்ப்பாணம் சிறையில் இருந்து மேலும் 51 பேர் இன்று விடுவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2016      உலகம்
Image Unavailable

யாழ்ப்பாணம் : யாழ்ப்பாணம் சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 55 பேர்  விடுவிக்கப்பட்டனர்.  இலங்கை சிறைகளில் ராமநாதபுரம் மீனவர்கள் 37 பேர், புதுக்கோட்டை மீனவர் கள் 22 பேர், நாகப்பட்டினம் மீனவர்கள் 37 பேர், காரைக்கால் மீனவர்கள் 10 பேர் என மொத்தம் 106 மீனவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், திரி கோணமலை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தியா - இலங்கை கூட்டுக் குழு கூட்டத்துக்கான தீர்மானங்களை வரைவு செய்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் சிறிசேனாவை கடந்த புதன்கிழமை சந்தித்து பேசினார். அப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்று இலங்கை சிறைகளில் உள்ள 106 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு, நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டிருந்த 55 தமிழக மீனவர் கள் ஊர்காவல்துறை, பருத்தித் துறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்களது 75 படகுகள் விடுவிக்கப்பட வில்லை. மேலும் 51 மீனவர்கள் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ரங்கநாதன் உள்ளிட்ட மீனவர்கள் 8 பேரை கடந்த 4-ம் தேதி இலங்கை மீனவர்கள் பிடித்துச் சென்று, இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.  அவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது. ஆனால், இதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொள்ளாததால், மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் 8 பேரும் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்ட அவர்களை, அமைச்சர் ஜெயபால், நாகை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்று, புத்தாடைகள் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்