முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிச்சைக்காரன் படப்பாடலுக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2016      சினிமா
Image Unavailable

சென்னை : பிச்சைக்காரன் ‘’ திரைப்படபாடலுக்கு டாக்டர்கள் கடும் கண்டனம். தெரிவித்துள்ளனர்.  இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:-

திரைப்பட இயக்குநர் அரிகரன் இயக்கத்தில் ``பிச்சைக்காரன் ‘’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கான விளம்பரப் பாடல் ஒன்று லாகன் எழுதி, விஜய் ஆண்டனி இசை அமைப்பில் உருவாகி யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பாடல் காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கிறது. இப்பாடலில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. ``கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் ‘’ என்ற பாடல் வரிகள் மிகவும் மோசமாக ,இட ஒதுக்கீடூ மூலம் படித்த டாக்டர்களை சித்தரிக்கிறது.

அந்த டாக்டர்கள் தப்பு தப்பா ஊசிப்போட்டு நோயாளிகளை கொல்லுகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, விஷமத்தனமானது.இட ஒதுக்கீட்டிற்கும்,சமூக நீதிக்கும் எதிரானது. இட ஒதுக்கீடு , தகுதி திறமையை பாதித்து விடுகிறது என்ற தவறான உளுத்துப் போன வாதத்தை மீண்டும் மீண்டும் முன் வைக்கும் முயற்சியாகும். தமிழகத்தில் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தற்பொழுது 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தமிழகம் மருத்துவத் துறையில் முன்னேறி உள்ளது. இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக சென்னை உள்ளது.உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக சென்னைக்கு படை எடுக்கின்றனர். சென்னையிலும், தமிழகத்திலும் தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் பெரும்பாலும், இட ஒதுக்கீட்டின் மூலம் பயின்றவர்கள்தான். அவர்களது திறமையை உலகமே போற்றுகிறது, பாராட்டுகிறது.

உண்மைநிலை, இவ்வாறு இருக்க, இட ஒதுக்கீட்டின் மூலம் டாக்டர்கள் ஆனவர்களால், நோயாளிகள் இறப்பதாகக் கூறுவது இத்திரைப்படக் குழுவினரின் வக்கிரமான சாதி மேலாதிக்க உணர்வைத் தான் பிரதிபலிக்கிறது. அதுவும், கோட்டாவில் சீட்டு வாங்கி டாக்டர் ``ஆவுறான்’’ எனவும், ``சாகடிக்கிறான் ‘’ என ஒருமையில் கூறுவது சாதி மேலாதிக்க வெறியை வெளிப்படுத்துகிறது.இது கண்டிக்கத் தக்கது. இந்தியா முழுவதும் 406 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் சரிபாதிக்கு மேல் தனியார் மற்றும் தனியார் நிகர் நிலைப் பல்கைலக்கழகத்தை சார்ந்த மருத்துவக் கல்லூரிகள்தான்.

தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், தனியார் நிகர் நிலைப் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களுக்கும் தகுதி மற்றும் திறமைகளைப் பார்க்காமல் தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.தமிழகம் மட்டுமின்றி , இந்தியா முழுவதும் ஏராளமான, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பகிரங்கப் போட்டியிலேயே மருத்துவ இடங்களைப் பெறுகின்றனர். பல்வேறு பிரிவினருக்கும் இடையிலான கட் ஆஃப் மதிப்பெண் இடைவெளி மிகவும் குறைந்து விட்டது.எந்த விதத்திலும், தகுதியில் குறைந்தவர்கள் அல்ல, இட ஒதுக்கீட்டு உரிமையை பெற்ற மாணவர்கள்.தனியார் மருத்துவக் கல்லூரிகளில் , ஒரே தகுதியாக பணம் மட்டுமே உள்ளது.எனவே, உண்மைக்கு மாறாக ,திட்டமிட்டு உள்நோக்கதோடு, சாதிய மேலாதிக்க வக்கிர உணர்வோடு, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மருத்துவர்களை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.இது கடும் கண்டனத்திற்குரியது.

இந்தப் பாடலுக்கு உடனடியாக தடை விதிப்பதோடு, இந்தத் திரைப்படக் குழுவினர் மீது, குறிப்பாக பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர் ,இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது சாதிய ரீதியிலான வெறுப்பை தூண்டுவதற்காகவும், ஒடுக்கப்பட்டோரை இழிவு படுத்துவதற்காகவும் சட்ட ரீதியான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago