முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் பல்கலை. மாணவர் தற்கொலை விவகாரம்: ராகுல் காந்திக்கு பா.ஜ.க கண்டனம்

புதன்கிழமை, 20 ஜனவரி 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - ஐதராபாத் பல்கலை. மாணவர் தற்கொலை விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் நீக்கம் வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படித்து வந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாதான் காரணம் என்று கூறி அந்த பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறும்போது, பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். ராகுல்காந்தியின் இந்த கோரிக்கையை பா.ஜனதா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், ‘ மாணவரின் சாவை வைத்து ராகுல்காந்தி அரசியல் நடத்துவது மிகவும் கேவலமானது. இதில், மத்திய அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை பா.ஜனதா முற்றிலுமாக நிராகரிக்கிறது என்று மறுத்தார். முன்னதாக பா.ஜனதா பொதுச்செயலாளர் பி.முரளிதர்ராவ் கூறும்போது,

காங்கிரஸ்தான் தலித் தலைவரான அம்பேத்கரை அவருடைய வாழ்நாள் முழுவதும் துன்புறுத்தி வேதனைப்படுத்தியது. இப்போதோ தலித்துகளின் பாதுகாவலன் போல் வேடம் போடுகிறது. காங்கிரஸ், சில ஊடகங்கள் இந்த சம்பவத்தை அரசியல் ஆக்க முயற்சிக்கின்றன. மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கும் அவர் தலித் என்பதற்கும் எந்தவிதத்திலும் தொடர்பு கிடையாது என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்