முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

பெனாங் : மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் ப்ரீ கோல்டு பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஸ்காட்லாந்து வீராங்கனை கிரிஸ்டி கில்மருடனான இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 21-15, 21-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனார். இந்த வெற்றி மூலம் 5-வது கிராண்ட் ப்ரீ பட்டம் வென்றுள்ளார் சிந்து. பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் இதே கிரிஸ்டி கில்மருக்கு எதிரான போட்டியில் சிந்து தோல்வியடைந்தார், ஆனால் இம்முறை அவரை எழும்பவிடாமல் 32 நிமிடங்களில் அடித்து நொறுக்கினார் சிந்து.

தொடக்க கேமில் முதலில் 5-2 என்றும் பிறகு 12-6 என்றும் பிறகு 18-10 என்றும் சிந்து முன்னிலை வகித்தார். ஆனால் கில்மர் 4 புள்ளிகளை அடுத்தடுத்து வென்றார். ஆனால் செட்டை வெல்லும் அளவுக்கு அச்சுறுத்தவில்லை. 2-வது செட்டிலும் தொடக்கத்தில் 5-2 என்று முன்னிலை வகித்தார் சிந்து. ஆனால் கில்மர் இந்த வித்தியாசத்தை சில ஷாட்கள் மூலம் நீக்கி நெருக்கினார். ஆனால் அதன் பிறகு சிந்துவின் சர்வ், ரேலி ஆட்டம் இரண்டுமே கை கொடுக்க கில்மரும் தவறுகளை இழக்க 16-5 என்று அதிரடி முன்னேற்றம் கண்டார் சிந்து.  அதன் பிறகு 21-9 என்று செட்டைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்