முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : முகுருஸா அதிர்ச்சி தோல்வி சானியா ஜோடி முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் முன்னணி வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா அதிர்ச்சி தோல்வியடைந்தார். சானியா மிர்சா இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  ஆஸ்திரேலிய ஓபன் டென்னி ஸில் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. ஆடவர் பிரிவில் 4ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-2, 6-3, 7-6(3) என்ற நேர்செட்டில் செக்குடியரசின் லூகாஸ் ரஸோலை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். 2ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-2, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 32வது இடத்தில் உள்ள போர்ச்சுகலின் ஜோவாவை வீழ்த்தினார்.

மகளிர் பிரிவில் 3ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவர் 3-6, 2-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 48வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவாவிடம் வீழ்ந்தார். இதேபோல் செர்பியாவின் முன்னனி வீராங்கனையான அனா இவாநோவிக் 6-4, 4-6, 4 -6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிஸனிடம் தோல்வியடைந்தார்.

தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள பெல்லாரஸின் விக்டோரியா அஸரன்கா 6-1, 6-1 என்ற நேர்செட்டில் எளிதாக ஜப்பானின் நவோமி ஓஸாகாவையும், 7வது இடத்தில் உள்ள ஏஞ்சலிக் ஹர்பர் 6-1, 6-3 என்ற கணக்கில் மேடிஸன் பிரிங்ஹலையும் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினர்.  மகளிர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-2, 6-3 என்ற நேர்செட்டில் உக்ரைன் சகோதரிகளான நடியா கிஷெநோக், லைடுமைலா கிஷெநோக் ஜோடியை வீழ்த்தி 3வது சுற்றில் நுழைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 7-5, 6-1 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் அஸ்லா டாம் ஜனோவிக், நிக் கிர்ஜியோஸ் ஜோடியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்