முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டி: முதல் ஆட்டத்தில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்

திங்கட்கிழமை, 25 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

அடிலைடு, - இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டி தொடரின் முதல் ஆட்டம் இன்று அடிலைடுவில் நடக்கிறது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலியாவிடம் 1-4 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ள நிலையில், இந்தியா– ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் அடிலைடுவில் இன்று நடக்கிறது. ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி டி-20 தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை ஒருநாள் போட்டியில் பேட்டிங் சிறப்பாக இருந்தும், பந்துவீச்சு சரியாக அமையாததால் தோல்வி ஏற்பட்டது.

இதை டி-20 போட்டியில் சரிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளது. டி-20 ஓவர் உலககோப்பை போட்டி நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியமானதாக அமையவுள்ளது. பேட்டிங்கை பொறுத்த வரை ரோகித்சர்மா, வீராட்கோலி, ஷிகார் தவான் மிகவும் நல்ல ஃபார்மில் உள்ளனர். யுவராஜ்சிங், ரெய்னா வருகையும் அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 போட்டியில் நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறுவார் என தெரிகிறது. அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் ஆசிஷ் நெக்ரா, ஹர்பஜன்சிங் டி-20 அணியில் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் தொடரை கைப்பற்றியது போலவே டி-20 தொடரை வெல்லும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை கேப்டன் ஆரோன் பிஞ்ச், வார்னர், சுமித், மார்ஷ் சகோதரர்கள் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

மிகவும் அனுபவம் வாய்ந்த வாட்சன், டய்ட் ஆகியோரும் அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார்கள். காயம் காரணமாக பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இரு அணிகளும் இன்று மோதுவது 10–வது டி-20 ஆட்டமாகும். இதுவரை நடந்த 9 போட்டியில் இந்தியா 5 ஆட்டத்திலும், ஆஸ்திரேலியா 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனார். கடைசியாக டாக்காவில் 2014–ம் ஆண்டு உலககோப்பையில் இந்தியா 73 ரன்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.08 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய அணி வீரர்கள் வருமாறு:–
டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், வீராட்கோலி, யுவராஜ்சிங், ரெய்னா, அஸ்வின், குர்கெரத்சிங், ரிஷி தவான், ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், உமேஷ்யாதவ், பம்ரா, ஹர்த்திக் பாண்டியா, ஆசிஷ் நெக்ரா.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் வருமாறு:–
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), வார்னர், சுமித், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், வாட்சன், மிச்சேல் மார்ஷ், பல்க்னெர், கேமரூன் பாய்ஸ், ஸ்காட்போலண்டு, டய்ட், நாதன் லயன், ஹாஸ்டிங்ஸ், கிறிஸ் லயன், மேத்யூ வாடே, ஆண்ட்ரூ டை , கானே ரிச்சர்ட்சன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்