முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி துப்பாக்கி சூடு விவகாரம்: முலாயம் சிங் மன்னிப்பு கேட்க பா.ஜ.க. வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 25 ஜனவரி 2016      அரசியல்
Image Unavailable

லக்னோ - 1990-ல் அயோத்தியில் கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட விவகாரம் தொடர்பாக அப்போதைய முதல்வர் முலாயம் சிங், இறந்த குடும்பத்தினரிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. அயோத்தியில் கடந்த 1990-ம் ஆண்டில் கரசேவகர்கள் கரசேவை நடத்த திரண்டனர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அப்போதைய முதல்வர் முலாயம் சிங் யாதவ்  உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில்  16 பேர் உயிரிழந்தனர்.  இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு  முலாயம் சிங் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதீய ஜனதா வலியுறுத்தி வந்தது.

அந்த சம்பவம் நடந்து 25 வருடங்களுக்கு பிறகு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர், அயோத்தியாவில் 1990-ல் கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதற்காக வருத்தப்படுகிறேன் என கூறியுள்ளார். இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் கூறும்பொழுது, முலாயம் அரசு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட போது கரசேவகர்கள் தங்களிடம் ஆயுதங்கள் ஏதுமின்றி வெறுங்கைகளுடன் இருந்தனர்.

இதுபோன்ற நிலையில், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது என்பது கேவலமிக்க குற்றம். கரசேவை என்பது மத அடையாளம் என முன்பே அறிவிக்கப்பட்ட நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், மதத்துடன் தொடர்புடைய இடத்தை காப்பதற்காக அதனை செய்ய வேண்டியிருந்தது என கூறியுள்ளார்.  25 வருடங்கள் கழித்து வருத்தமடைகிறேன் என கூறுகிறார்.  அது போதாது. தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் பாதிப்பினையும் அது முடிவிற்கு கொண்டு வருவதில்லை என பதக் கூறியுள்ளார். மேலும் அந்த சம்பவத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்த கரசேவகர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்