முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் : மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டிக்கு சானியா-ஹிங்கிஸ் ஜோடி தகுதி

புதன்கிழமை, 27 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சானியா மிர்ஷா - சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியுள்ளது. அரை இறுதிப் போட்டியில் இந்த ஜோடி, ஜெர்மனியை சேர்ந்த ஜூலியா ஜார்ஜியஸ் - செக் குடியரசை சேர்ந்த கரோலினா பிளிஸ்கோவா ஜோடியை அபாரமாக வெற்றி கொண்டது. சானியா - ஹிங்கிஸ் ஜோடி மொத்தமே 54 நிமிடத்தில் போட்டியை முடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது. இப்போட்டியில் சானியா ஜோடி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

முன்னதாக, சானியா மிர்சா, மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-2, 4-6, 6-1 என்ற செட்டில் 12வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அனா லினா, அமெரிக்காவின் கோ கோ வேன்ட்வேஹி ஜோடியை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது. இரட்டையர் பிரிவில் 3வது சுற்றில் இந்த ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக ரஷ்யாவின் ஸ்வெட்லனா குஸ்நெட்சோவா, இத்தாலியின் ரோபர்ட்டா வின்ஸி ஜோடியை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிப்பெற்றிருந்தது.ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் சானியா மிர்ஷா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்றதன் மூலம் 35 போட்டியில் தொடர் வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்