முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்துவீச்சாளர் பம்ராவுக்கு கவாஸ்கர் புகழாரம்

புதன்கிழமை, 27 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பம்ராவுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது:– புதுமுக வீரர் பம்ரா சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டி மற்றும் அடிலெய்டு டி-20 போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். பந்துவீச்சு செயல் அவருக்கு உதவியாக உள்ளது. யார்க்கர் பந்துகளை வீசுகிறார்.

பம்ரா எப்படி பந்துவீசுகிறார் என்பதை சீனியர் பந்துவீச்சாளர்கள் அவரிடம் இருந்து பாடம் கற்கவேண்டும். இதை நான் அறிவுரையாக சொல்கிறேன். சுழற்பந்து வீரர்கள் மிகவும் நேர்த்தியுடன் பந்து வீசினார்கள். அஸ்வின் சிறப்பாக செயலபட்டார். இந்தியாவின் இந்த ஆட்டத்தை பார்க்கும் போது டி-20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்