முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - ஆந்திர மாநிலம், அனந்தபூர் நீதிமன்றத்தில் இந்திய ஒருநாள் கேப்டன் டோனிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ஆங்கலி இதழ் ஒன்றில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் டோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப் படம் இருந்தது. இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. 

''காட் ஆப் பிக் டீல்ஸ்'' என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் இந்துக் கடவுளை அவமதிப்பது போல உள்ளதாக ஆந்திராவில் உள்ள அனந்தபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த ஆந்திர நிதிமன்றம், கடந்த 9-ம் தேதி டோனிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது  இந்த நிலையில்,அனந்தபூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் டோனி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆந்திர நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கை அனந்தபூரில் இருந்து பெங்களூருக்கு மாற்ற வேண்டும் என்ற டோனி தரப்பு கோரிக்கை தொடர்பாக பதிலளிக்க கோரியும் ஆந்திர போலீசாருக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.  முன்னதாக, டோனி தரப்பு கோரிக்கையை ஏற்று அனந்தபூர் நீதிமன்றம் பிடிவாரண்டை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்