முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டி-20 போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைபற்றியது இந்திய அணி!

வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில், இந்தியா வெற்றி பெற்ற நிலையில், மெல்போர்னில் நேற்று 2-வது டி-20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியிலும் வெற்றி பெற்றால், டி-20 தொடரை கைப்பற்ற முடியும் என்ற முனைப்பில் இந்தியா களமிறங்கியது. டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், விராட் கோஹ்லி, 33 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து நாட்-அவுட்டாக களத்தில் நின்றார்.

ஷிகர் தவான் 42 ரன், டோணி 14 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் டோணி அவுட்டான பிறகு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா பந்து எதையும் எதிர்கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியால் 184 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. இதையடுத்து, 185 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி ஆடத்தொடங்கியது. ஸ்மித் இல்லாத நிலையில் கேப்டனாக பொறுப்பு வகித்த ஆரோன் பின்ச்சும், ஷான் மார்ஷூம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவருமே இந்திய வேகப்பந்து வீச்சை அடித்து நொறுக்கினர்.

இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 9.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா 94 ரன்கள் குவித்த நிலையில், 23 ரன்கள் எடுத்திருந்த ஷான் மார்ஷ், அஸ்வின் பந்தில் ஹர்திக் பண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.இதன்பிறகு ஆஸ்திரேலியாவை எழ விடாமல் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அமுக்கிவிட்டனர். கிறிஸ் லைன் 2 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், ஷேன் வாட்சன், 15 ரன்களிலும் நடையை கட்ட ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் ஆட்டம் கண்டது.

ஒருமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஆரோன் பின்ச் எதிர்பாராத விதமாக 74 ரன்களில் ரன் அவுட் ஆக, மொத்தமாக இந்தியா பக்கம் சாய்ந்தது ஆட்டம். கடைசி கட்டத்தில் துள்ளிய ஃபால்க்னர் ஜடேஜா பந்தில் டோணியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு 10 ரன்களில் வெளியேற்றப்பட்டபோது, இந்திய வெற்றி உறுதியானது. டோணியின் கால் இடையில் பந்து பட்டு ஸ்டம்பில் பட்டதால் அது அதிருஷ்டவசமான ஸ்டம்பிங்கானது. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3 ஆட்டங்கள் கொண்ட டி- 20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago