முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் லட்டு விலை உயராது தேவஸ்தானம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜனவரி 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதியில் லட்டு விலை உயராது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் லட்டு பிரசாதம் இல்லாமல் ஊர் திரும்புவது இல்லை. ஒரு லட்டு தயாரிக்க தேவஸ்தானத்துக்கு ரூ.39 செலவாகிறது. எனினும் படியேறி நடந்து வரும் பக்தர்களுக்கு இலவசமாகவும், கூடுதல் லட்டு ஒன்று ரூ. 10க்கும் வழங்கப்படுகிறது.

இதற்கும் மேல் கூடுதலாக லட்டு பிரசாதம் தேவைப்படுவோருக்கு நான்கு லட்டுகள் ரூ.100 விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மானிய விலையில் லட்டுகள் வழங்கப்படுவதால் தேவஸ்தானத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் லட்டு விலை விரைவில் உயரும் என கூறப்பட்டது. இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது லட்டு பிரசாதம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விலை ஆகியவற்றை உயர்த்தக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.  இது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ஆர்ஜித, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விலை ரூ.400 ஆக உயர்த்தப்பட மாட்டாது. லட்டு விலையும் இப்போதைக்கு உயர்த்தும் எண்ணம் இல்லை, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்