முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி வைட்-வாஷ் செய்தது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டுவென்டி 20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. தொடரை 3-0 என்ற கணக்கில் அட்டகாசமாக வென்று டுவென்டி 20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இந்தியா. முன்னதாக 3வது மற்றும் கடைசி டுவென்டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி ரன் குவித்தது. கேப்டன் ஷான் வாட்சன் அபார சதம் போட்டார். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அதேசமயம் இந்திய வீரர்கள் அட்டகாசமாக சேஸ் செய்து வெற்றியை தேடி தந்தனர்.

ஆஸி. கேப்டன் வாட்சன் 71 பந்துகளில் 124 ரன்களை அதிரடியாக சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் இந்தியத் தரப்பில் ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தனது சிறப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்துவிட்டனர். இன்னொரு பக்கம் ஷிகர் தவான் புயல் வேகத்தில் ஆடி ஆஸி. பந்து வீச்சாளர்களை அரட்டி விட்டார்.

இப்போட்டியில் இறுதி வரை சற்றும் விறுவிறுப்பு குறையாமல் சேஸ் செய்த இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை சாய்த்து அதிரடி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று ஆஸ்திரேலிய அணியை வைட்-வாஷ் செய்தது இந்தியா. ஆஸ்திரேலியாவை சொந்த ஊரில் வைத்து இந்தியா வைட்-வாஷ் செய்வது இதுவே முதல்முறை.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி வாட்சன் சதத்துடன 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை குவித்தது. 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு களமிங்கிய இந்தியா அணியில்  ரோஹித் சர்மா (52), விராத் கோஹ்லி (50) அரை சதம் போட்டனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் விளாசினார். ஷிகர் தவான் வெறும் 9 பந்துகளில் 26 ரன்களைக் குவித்து வெளியேறினார். கடைசி நேரத்தில் சுரேஷ் ரெய்னாவும், யுவராஜ் சிங்கும் சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 200 ரன்களைக் குவித்தது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த ஆரோன் பின்ச்சுக்குப் பதில் உஸ்மான் காஜா சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல காமரூன் பான்கிராப்ட், டிரவிஸ் ஹெட், காமரூன் பாய்ஸ், ஷான் டெய்ட் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை. முதல் இரு போட்டிகளில் ஆடிய அணியே இப்போட்டியிலும் களம் இறக்கப்பட்டது.  இதந்த தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வைட்-வாஷ் செய்ததால் 20-20 அணிகள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்