முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் உற்பத்தி 10 கோடியை எட்டியது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

திங்கட்கிழமை, 1 பெப்ரவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - செல்போன் உற்பத்தி, ஸ்மார்ட் போன் விற்பனை 10 கோடியை எட்டியுள்ளதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது., கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் மின்னணு சார்ந்த தொழில்துறையில் 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். இந்த முதலீட்டின் மூலம் சுமார் 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். இவற்றில் 15 புதிய கைபேசி தொழிற்சாலைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டதால் கடந்த 2014-ம் ஆண்டு வரை ஆறு கோடியே 80 லட்சமாக இருந்த கைபேசி உற்பத்தி, கடந்த 2015-ம் ஆண்டில் பத்து கோடியாக உயர்ந்துள்ளதாக கூறினார்.

இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி நமது நாட்டில் பத்து கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. நமது நாட்டில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. கைபேசி மற்றும் கம்ப்யூட்டர்களின் மூலம் கடந்த ஆண்டைவிட பத்து கோடி இந்தியர்கள் இணையங்களை பயன்படுத்தியதால் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 40 கோடியாக உயர்ந்துள்ளது. வெகு விரைவில் இது 50 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்