முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன்: ஆன்டி முர்ரேவை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

திங்கட்கிழமை, 1 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் நேர் செட்டில் ஆன்டி முர்ரேவை தோற்கடித்து 6–வது முறையாக சாம்பியன் பட்டம்  வென்றார். மெல்போர்னில் கடந்த இரண்டு வார காலம் நடந்து வந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கடைசி நாளில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின், நோவக் ஜோகோவிச்சும், 2–ம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவும் பலப்பரீட்சையில் இறங்கினர்.

முதலாவது செட்டை சுலபமாக வசப்படுத்திய ஜோகோவிச்சுக்கு, அடுத்த இரு செட்டுகளில் முர்ரே கடும் சோதனை கொடுத்தார். மணிக்கு அதிகபட்சமாக 213 கிலோ மீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்ட முர்ரே விடாப்பிடியாக போராடிய போதிலும் இறுதியில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார். 2 மணி 53 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6–1, 7–5, 7–6 (7–3) என்ற நேர் செட் கணக்கில் முர்ரேவை சாய்த்து 6–வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை வென்றார். இதற்கு முன்பு 2008, 2011, 2012, 2013, 2015 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு அவர் பட்டத்தை வென்றிருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபனை அதிக முறை வென்றிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ராய் எமர்சனின் சாதனையை (1961, 1963, 1964, 1965, 1966, 1967) ஜோகோவிச் சமன் செய்தார்.

அதே சமயம் ஆஸ்திரேலிய ஓபனில் முர்ரேவின் தோல்வி தொடருகிறது. அவர் இதுவரை ஆஸ்திரேலிய ஓபனில் 5 முறை (2010, 2011, 2013, 2015, 2016) இறுதி ஆட்டத்துக்கு நுழைந்தும் அனைத்திலும் தோல்வியே மிஞ்சியிருக்கிறது. இவற்றில் 4 முறை ஜோகோவிச்சிடம் தோற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கிய 26 வயதான ஜோகோவிச்சுக்கு ரூ.16½ கோடி பரிசுத்தொகையும், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. முர்ரே ரூ.8¼ கோடியை பரிசாக பெற்றார். ஜோகோவிச் கூறும் போது, கடந்த 15 மாதங்களில் எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த டென்னிஸ் ஆட்டத்தை விளையாடி வருகிறேன் என்பதில் சந்தேகமில்லை. ராய் எமர்சனின் சாதனையை சமன் செய்து வரலாறு படைத்தது, நம்ப முடியாத உணர்வை தருகிறது. லாவர், ஜோர்ன் போர்க் ஆகியோரின் வரிசையில் நானும் இணைந்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும்  என்றார்.

உலகின் நம்பர் ஒன் வீரராக வலம் வரும் 28 வயதான ஜோகோவிச் இதுவரை 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபனை 6 முறையும், விம்பிள்டனை 3 முறையும் (2011, 2014, 2015), அமெரிக்க ஓபனை 2 முறையும் (2011, 2015) வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் மட்டும் அவருக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையரில் ஒட்டுமொத்தமாக அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களின் வரிசையில் அவர் லாவர், போர்க் ஆகியோருடன் 5–வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் விவரம் வருமாறு:– ரோஜர் பெடரர் (சுவிட்லாந்து)–17, பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா)–14, ரபெல் நடால் (ஸ்பெயின்)–14, ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா)–12, ரோட் லாவர் (ஆஸ்திரேலியா)–11, ஜோர்ன் போர்க் (சுவீடன்)–11, ஜோகோவிச் (செர்பியா)–11, பில் டில்டென் (அமெரிக்கா)–10.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago