முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் தீவிரவாதிகள் மீதான வான்வழி தாக்குதல்கள் தொடரும்: ரஷ்யா

புதன்கிழமை, 3 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

மாஸ்கோ - சிரியாவில் கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீதான வான்வழி தாக்குதல்கள் தொடரும் என்று ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரியாவில் ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும்  உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.  இந்த நேரத்தில் சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனால், அமைதி பேச்சுவார்ததையில் முட்டுக்கட்டை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

வான்வழி தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தார். அதற்கு நேற்று பதிலளித்த ரஷ்யா, தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை சிரியாவில் விமான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக, மஸ்கட் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஷிய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ராவ், விமான தாக்குதல்களை நாங்கள் நிறுத்த மாட்டோம். அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் கிளையான ஜபாத் அல்-நுஸ்ரா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை வெற்றிகொள்ளும்வரை சிரியாவில் எங்கள் வான்வழி தாக்குதல் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago