முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில் அன்புமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

புதன்கிழமை, 3 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி - மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் பா.ம.க. அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சி.பி.ஐ. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு, முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில், டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.  மத்திய சுகாதாதரத்துறை அமைச்சராக இருந்தபோது,

பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர், உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ ஆகிய இடங்களில் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு, முறைகேடாக அனுமதி வழங்கினார். இதுதொடர்பான வழக்கு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அன்புமணி மீது கிரிமினல், ஊழல், மோசடி புகார் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என ஏற்கெனவே டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அன்புமணி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று இம்மனுவை விசாரித்த நீதிபதி தேஜி, அதனை ஏற்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்