முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி பங்கேற்கும் ''மேக் இன் இந்தியா'' நிகழ்ச்சிக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

புதன்கிழமை, 3 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

டெல்லி - பிரதமர் மோடி பங்கேற்கும்  மேக் இன் இந்தியா நிகழ்ச்சிக்கு தடைவிதித்து மகாராஷ்டிர உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதியும் வழங்கியது. பிரதமர் மோடி கொண்டு வந்த ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில், ‘மேக் இன் இந்தியா வாரம்’ என்ற நிகழ்ச்சி மும்பை கிர்காவ் கடற்கரையில் வருகிற 13–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 6 நாட்கள் நடைபெறும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் வெளிநாட்டு பிரதமர்கள், பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 600–க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதனிடையே, கிர்காவ் கடற்கரையின் சுற்றுப்புற தன்மையை கருத்தில் கொண்டு, அங்கு நிகழ்ச்சிகள் நடத்த மும்பை ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. இந்த நிலையில், பிரதமர் பங்கேற்கும் ‘மேக் இன் இந்தியா’ வார நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளிக்குமாறு மராட்டிய அரசு தரப்பில் அம்மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு, கிர்காவ் கடற்கரையில் நிகழ்ச்சிகளை நடத்த அரசுக்கு அனுமதி மறுத்தது. இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மராட்டிய அரசின் தரப்பில் ஆஜரன சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், இந்த வழக்கின் மீது விரைவில் முடிவு அறிவிப்பதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், மராட்டியத்தில் முதலீடுகளை ஊக்குவிக்கவும், கடந்த காலங்களில் இதே கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் வாதிட்டார். இந்நிலையில் கடந்த 2 தினங்களாக வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மேக் இன் இந்தியா நிகழ்ச்சியை மகாராஷ்டிரா அரசு நடத்துவதற்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago