முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.கவை விஜயகாந்த் விமர்சிக்காதது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

 ஆலந்தூர் - எஸ்.வி.எஸ்.கல்லூரி விவகாரத்தில் தி.மு.க.வை விஜயகாந்த் விமர்சிக்காதது ஏன்?என்று அன்பு மணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது என்று திருமாவளவன் கூறியிருப்பது சரியானதுஅல்ல. கடந்த 2006ம் ஆண்டில் இயற்கை மருத்துவ கல்லூரிகளுக்கு அந்தந்த மாநில அரசுகளே அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டது.

2008ம்ஆண்டில் எஸ்.வி.எஸ். கல்லூரி மருத்துவ கல்லூரிக்கு தி.மு.க. அரசு அனுமதி அளித்தது. அப்படியிருக்க திருமாவளவன் ஏன் தி.மு.க.வை விமர்சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் விஜயகாந்த் மற்றும் இளங்கோவனும் தி.மு.கவை விமர்சிக்காதது ஏன்? அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறீர்களா ? இவ்வாறு அவர் தெரிவித்தார். பசுமை தாயகம் தலைவர் சவுமியா தேர்தலில் போட்டியிடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளதே? என்று கேட்டபோது சவுமியா அன்புமணிக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago