முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார்: கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேட்டி

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவை உலுக்கி வரும் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று அம்மாநில முதல்வர்  உம்மன்சாண்டி கூறியுள்ளார். சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் முன்பாக அண்மையில், முக்கிய குற்றவாளி தொழிலதிபர் சரிதா நாயர் தங்களது சோலார் பேனல் நிறுவனத்துக்கு உதவி செய்வதற்காக முதல்வர் உம்மன் சாண்டிக்கு அவருடைய உதவியாளர் மூலம் ரூ.1 கோடியே 90 லட்சமும், மின்சாரத்துறை அமைச்சர் அரயாதன் முகமதுவுக்கு ரூ.40 லட்சமும் லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டி இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் உம்மன்சாண்டி பதவி விலகவேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதன்பின்பு முதல்வர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறுகையில்,  என் மீதான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளால் நிரூபிக்க முடியுமா? இதில் ஒரு சதவீத உண்மை இருந்தால் கூட அரசியல் வாழ்வில் இருந்து விலகத் தயார். இதில் உண்மை வெளியே வரும். மாநில மக்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வார்கள் என்றார். நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மனசாட்சி சுத்தமானது. மக்களுக்கு எல்லாம் புரிகிறது. மீடியாக்களுக்கு தான் கடைசியில் புரிகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று அவர்கள் நினைத்தால் சட்டசபை தேர்தல் வரைக்கும் காத்திருக்க வேண்டியது தானே? அவர்கள் பயப்படுகிறார்கள் என்றார். இதற்கிடையே மாநில கவர்னர் பி.சதாசிவத்தை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையில்  சந்தித்த இடது சாரி தலைவர்கள், சோலார் பேனல் ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதால் சட்டசபையில் அரசின் கொள்கை அறிவிப்புகள் பற்றிய உரையை கவர்னர் வாசிக்கக்கூடாது என்று வற்புறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago