முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 23-ம் தேதி தொடங்குகிறது

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - 2 அமர்வுகளாக நடைபெறவுள்ள பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான முடிவு அமைச்சரவை கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்டது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக பிப்ரவரி இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும். இந்த ஆண்டு தமிழகம், கேரளா, புதுவை, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாராளுமன்ற கூட்டத் தொடரை எந்த நாட்களில் நடத்துவது என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்காக இந்த 5 மாநில அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற குழுத் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று ஆலோசனையும் நடத்தினார்.

இதன் பின்னர் பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்ய ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் பிப். 23-ம் தேதி தொடங்குகிறது. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுகிறார்.

2 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 23-ல் தொடங்கி மார்ச்  16 வரை நடைபெற உள்ளது. அதேபோல், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு ஏப்ரல் 25-ல் தொடங்கி மே 13 வரை நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு  பிப்ரவரி 25-ம் தேதி தாக்கல் செய்கிறார். அதை தொடர்ந்து 26-ந் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், அடுத்ததாக பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் 29-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்