முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெய்ல் நிறுவன விவகாரம்: சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : விவசாய நிலங்களில் ‘கெயில்’ நிறுவனம் இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியும் அதில் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார். மத்திய அரசின் கெயில் நிறுவனம், கேரளா, கர்நாடகா இடையே இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கேட்கப்பட்டன. அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விவசாய நிலங்களில் குழாய் பதிக்க தமிழக அரசும் அனுமதி மறுத்தது.
இதனை எதிர்த்து கெயில் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், எரிவாயு குழாய் பதிக்க அனுமதி வழங்கியது. இதற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட், விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கெய்ல் நிறுவனம், 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்லும் குழாய்களை பதிக்க அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியும், அதில் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் ச.வி. சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago