முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா – ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல்

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - நேஷனல் ஹெரால்டு வழக்கில் கோர்ட்டில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்ற டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிற்கு எதிராக, சோனியா, ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜனதா கட்சி தலைவர் சுபபிரமணியசாமி டெல்லி கோர்ட்டில் நிதி முறைகேடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சம்மனை ரத்து செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா, ராகுல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கவ்ட் தலைமையிலான அமர்வு, சோனியா, ராகுல் ஆகியோர் விசாரணை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. விலக்கு கோரி தாக்கல் செய்த சோனியா, ராகுல் ஆகியோரின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் சுமன் துபே ஆகியோரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து  சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கடந்த டிசம்பர் மாதம் பாட்டியாலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வழக்கில் கோர்ட்டில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவிற்கு எதிராக, சோனியா, ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். நேரடியாக ஆஜராகுவதற்கு விலக்கு அளிக்ககோரிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு அவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வழக்கு தொடர்பான விசாரணை கோர்ட்டில் பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்