முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி 714 மெகாவாட்டாக உயர்வு

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

நெல்லை - கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி 714 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 30–ந்தேதி காலை 7.12 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரித்து அன்று மாலையில் 300 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த நிலையில் ‘டர்பைன்’ சுழற்சியை கண்காணிக்க கடந்த 31–ந்தேதி இரவே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த பணிகள் கண்காணிக்கப்பட்டது.

இதில் மீண்டும் மின் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் முடிவு செய்து அறிவித்தனர். இதை தொடர்ந்து 31–ந்தேதி நள்ளிரவு 11.56 மணிக்கு மீண்டும் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. மறுநாள் காலை வரை படிப்படியாக மின் உற்பத்தி அதிகரித்து 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் மின் உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி 714 மெகாவாட்டாக அதிகரித்தது. இது தொடர்பாக வளாக இயக்குனர் சுந்தர் கூறுகையில், ‘இன்னும் 2 நாட்களில் முதலாவது அணு உலையில் முழு கொள்ளளவான 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்’ என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்