முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருபகுதி: ஹபீஸ் சயீத் சர்ச்சைக்குரிய வீடியோவால் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருபகுதி என்று தீவிரவாதி ஹபீஸ் சயீத் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டு உள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 'காஷ்மீர் ஒருமைப்பாடு தினம்' ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீத் வெளியிட்டு உள்ள வீடியோவில் ’காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருபகுதியாகும்’ என்று கூறிஉள்ளான் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

ஜமாத் உத் தாவா தீவிரவாத அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் இணைய தளத்தில் இந்த சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது என்று ஆங்கில மீடியாஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.  ’காஷ்மீர், பாகிஸ்தானின் கழுத்துப் பகுதியாகும்,’ என்ற உருது தலைப்புடன் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. வீடியோவின் பின்பகுதியில் இந்திய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய குற்றவாளி அப்சல் குருவின் புகைப்படமும் இடபெற்று உள்ளது.

வீடியோவில் பாகிஸ்தான் நாட்டு முக்கிய தலைவர்களும் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத இயக்கங்களின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று மீடியாக்களுக்கு பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது. ஹபீஸ் சயீத் பேசும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், சமீபத்தில் பாகிஸ்தான் தனியார் மீடியாவில் சயீத் பேசும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

பாக்கிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கடந்த நவம்பர் 2-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தடைசெய்யப்பட்ட 60 இயக்கங்கள் மற்றும் அதன் தலைவர்கள் பேசும் காட்சிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது.  முன்னதாக, ஜனவரி 2–ந்தேதி பதன்கோட் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்ற காஷ்மீரைச்சேர்ந்த ஐக்கிய ஜிகாத் கவுன்சில் தலைவரையும் அவர் பாராட்டி பேசியது மட்டமில்லாமல், மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் ஹபீஸ் சயீத்தின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியாகியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்