முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான்கான் மீதான மகாராஷ்டிர அரசின் மேல்முறையீடு மனு: சுப்ரீம் கோர்டில் விசாரணை

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      சினிமா
Image Unavailable

புதுடெல்லி - காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான்கான் மீதான மகாராஷ்டிர அரசின் மேல்முறையீடு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணை நடந்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்.12-க்கு ஒத்திவைத்தது. 2002- ஆம் ஆண்டு மதுபோதையில் வேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மகாராஷ்டிரா அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  

  அப்போது, அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, டிசம்பர் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் சல்மான் கானை விடுதலை செய்து அளித்த தீர்ப்பு முற்றிலும் தவறானது, நீதியை கேலிக்குரியதாக்கும் இந்த தீர்ப்பை  ஏற்றுக்கொள்ள முடியாது.  மது அருந்திவிட்டு தனது சொகுசு காரை சல்மான் கான் ஓட்டி, சாலையோரத்தில் தூங்கியிருந்தவரை ஏற்றிக்கொலை செய்துள்ளார். போதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்று தெரிந்தும் அவர் காரை ஓட்டியுள்ளார். அதேபோல், காரை தான் ஓட்டியதாக சல்மான் கான் ஓட்டுநர் கூறுவதை ஏற்க முடியாது. விபத்து நடைபெற்ற போது, வீட்டில் இருந்ததை கார் ஓட்டுநரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காயம் அடைந்தவர்களின் சாட்சியமும் மும்பை நீதிமன்றத்தால் நிராகரிக்கபப்ட்டுள்ளது என வாதிட்டார்.  இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் பிப்ரவரி 12-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.  இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று சல்மான் கான் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்