முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய தமிழகம் முழுவதும் இன்று 2வது கட்டசிறப்பு முகாம்

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை -  வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க மற்றும் சேர்க்க செய்ய தமிழகம் முழுவதும் 2வது கட்ட சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. புதியதாக பெயர் சேர்க்க தேர்தல் கமிஷன் புதிய நிபந்தனை விதித்துள்ளது. 1-1-2016 ஐ தகுதிப்படுத்தும் நாளாக  கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு மாத முகாம் கடந்த ஆண்டு அக் டோபர் மாதம் நடைபெற்றது. அப்போது பெயர் சேர்க்க , நீக்க திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் 17லட்சத்து 18ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். அவை ஏற்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 20தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன் படி தமிழகத்தில் தற்போது,5கோடியே 79லட்சத்து 15ஆயிரத்து 482 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் ஆண் வாக்காளர்கள் 2கோடியே 88லட்சத்து 17ஆயிரத்து 750பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 2கோடியே 90லட்சத்து 93ஆயிரத்து 349பேரும் 3வது பாலின நபர்கள் 4ஆயிரத்து 383பேரும் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில்உள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய இரண்டு நாள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. அதன் படி முதல் கட்டமாக கடந்த மாதம்31ம்தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அன்று ஒரு நாளில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க , நீக்கம் செய்ய திருத்தம் செய்ய 4லட்சத்து19ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். அதனைத்தொடர்ந்து 2வது கட்ட சிறப்பு முகாம் இன்று(சனிக்கிழமை)  நடைபெறுகிறது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய2வது கட்ட சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் உள்ள 65ஆயிரத்து 616 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமில் இதுவரை வாக்காளர் பட்டியலில்  பெயர் இடம் பெறாதவர்கள் மற்றும் பெயரை நீக்க, திருத்தம் செய்ய விலாசம் மாற்ற பொது மக்கள் விண்ணப்பிக்கலாம். புதியதாக பெயர் சேர்க்க வருபவர்களிடம் ஏற்கனவே அவர்களது பெயர் வேறு ஏதாவது முகவரியில் உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு மீண்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்தல் இணைய தளமான (www.election.in.gov.in)) என்ற முகவரியிலும்  பெயர் நீக்க, சேர்க்க, திருத்தம் செய்ய வசதி உள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்