முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில நிதி அமைச்சர்களுடன் அருண்ஜெட்லி ஆலோசனை

சனிக்கிழமை, 6 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

சென்னை - பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொள்ள நேற்று தமிழக நிதியமைச்சர் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றார். மத்திய பொது பட்ஜெட் இந்த மாதம் 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து நேற்று மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும், அவற்றிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறித்தும் இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரிடம் பன்னீர் செல்வம் எடுத்துரைக்கிறார்.

இதனிடையே ஜி.எஸ்.டி மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவது குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் அருண் ஜெட்லி கலந்தாலோசிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநில நிதி அமைச்சர்களிடம் இது குறித்து பேச வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால். ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றுதில் சிக்கல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று 14-வது நிதிகுழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை களைவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்