முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த 14 போலீசார் குடும்பத்திற்கு ரூ.42 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சனிக்கிழமை, 6 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சாலை விபத்து மற்றும் உடல் நலக்குறைவுக் காரணமாக. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 42 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து முதலமைச்சர்  ஜெயலலிதா  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி சென்னை பெருநகர காவல், மடிப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த .பாலமுருகன், கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி திருச்சிராப்பள்ளி மாநகரம், கோட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த ஆரோக்கியதாஸ், கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த முனியசாமி, கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த பாஸ்கரன், கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த கார்த்திகேயன், கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த சண்முகம் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு நகர போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த சிவகுமார், திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த திருவேங்கடம்,
கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வேலூர் மாவட்டம், அணைகட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த சந்திரசேகர், கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட தனிப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த தாமோதரன், அரியலூர் மாவட்டம், செந்துறை காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த எழிலழகன்,

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த மனோகரன், கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி சேலம் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த பக்ருதீன், கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த . காசி ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர்  ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago