முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கின் அடுத்த விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை தொடர்பாக தற்போது வாதம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை வழக்கறிஞர் வாதாடியபோது, ஏர்செல் நிறுவன பங்குகளை வாங்கிய மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் அதற்கு பிரதிபலனாக சன் டைரக்ட் பிரைவேட் லிமிடெட்டில் ரூ.549.03 கோடியும் சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட்டில் ரூ.193.55 கோடியும் முதலீடு செய்தது என்று குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த நீதிபதி ஓ.பி. சைனி, இது மிகவும் சிக்கலான வழக்கு, ஏராளமான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, எனவே தீர விசாரித்த பிறகே உத்தரவு பிறப்பிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்