முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி ஜாமீன் கோரி மனு

ஞாயிற்றுக்கிழமை, 7 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

மும்பை : ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ராய்கட் வனப்பகுதியில் இளம்பெண் ஷீனா போரா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவ்வழக்கில் ஷீனாவின் தாய் இந்திராணி முகர்ஜி, முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவ அடிப்படையில் ஜாமீன் வழங்க கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்திராணி சார்பில் அவரது வழக்கறிஞர் குன்ஜன் மங்கலா தாக்கல் செய்த அந்த மனுவில், ‘‘இந்திராணியின் உடல்நிலை மோசமாக இருப்பதால், நீதியின் அடிப்படையில் அவருக்கு தற்போது முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டி இருக்கிறது. அவர் குணமடைந்தால் மட்டுமே மேற்கொண்டு நடக்கும் வழக்கு விசாரணையிலும் ஆரோக்கியத்துடன் பங்கேற்க முடியும்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் இந்திராணியின் மூளைக்கு பிராண வாயு முறையாக செல்லாததால் அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாகவும்  அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில மாதங்களாக வாந்தி, மயக்கம், நெஞ்சுவலி, தூக்கமின்மை, வயிற்றுவலி ஆகியவற்றால் இந்திராணி அவதிப்பட்டு வருவதால் 18 கிலோ வரை எடை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. சிறையில் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இந்திராணிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அந்த ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்