முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2வது ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 7 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து : நியூஸிலாந்துக்கு எதிரான இரண் டாவது ஒருநாள் போட்டியில் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி ஆட்டத் தால் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 281 ரன் கள் எடுத்தது. வில்லியம்சன் 60, ஷான்டர் 45, மில்னே 36, மெக் குலம் 28 ரன் எடுத்தனர். ஆஸி. தரப்பில் ஹஸல்வுட் 3, மிட்செல் மார்ஷ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளை யாடி ஆஸி. அணி 46.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வார்னர்-ஹவாஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16.2 ஓவ ரில் 122 ரன்கள் விளாசிய நல்ல அடித்தளம் அமைத்து கொடுத் தது. வார்னர் 79 பந்தில், 8 பவுண்டரிகள், 4 சிக்ஸருடன் 98 ரன்னும், ஹவாஜா 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ஸ்மித் 2, ஜார்ஜ் பெய்லி 0, மேக்ஸ்வெல் 6, மேத்யூ வேட் 2 ரன்களில் நடையை கட்டினர். மிட்செல் மார்ஷ் 72 பந்தில், 9 பவுண் டரிகள், 1 சிக்ஸருடன் 69 ரன்னும், ஜான் ஹஸ்டிங்ஸ் 47 பந்தில் 48 ரன்னும் சேர்க்க ஆஸி. அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வானார். இந்த வெற்றியால் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சம நிலைப்பெற்றுள்ளது. கடைசி ஆட்டம் ஹாமில்டனில் இன்று  நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago