முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

34 ஆயிரம் கோடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி ஒடிசாவில் துவங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 7 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர்(ஒடிசா) :  கடந்த காலங்களில் திட்டங்கள் உரிய காலகட்டங்களில் நிறைவேறாமல் இருந்தன. இதனால் நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருந்தது. பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்கு திட்டத்தை முன்கூட்டியே முடிக்கும் புதிய கலாச்சாரம் தேவை என்று பிரதமர் மோடி ஒடிசா கூட்டத்தில் வலியுறுத்தினார்.

ஒடிசாவில் இந்தியன் ஆயில் கழகத்தின் ரூ34ஆயிரத்து 555கோடி மதிப்பிலான சுத்திகரிப்பு தொழிற்சாலையை பிரதமர் மோடி நேற்று துவங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் சமீபத்தில் துவங்கிய திட்டங்கள் எல்லாம் தங்கள் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டவை என்று காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை நான் நிராகரிக்கிறேன். வெளிநாடுகளில் எண்ணெய் இறக்குமதி செய்வது அதிக அளவில் உள்ளது.. இதில் அன்னிய செலாவணி அதிக அளவில் உள்ளது. இதனை குறைக்கும் விதமாக வருகிற 2022ம் ஆண்டில் இந்தியா வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியை தற்போதைய அளவில் இருந்து 10சதவீத அளவில் குறைக்க வேண்டும். இதற்காக உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதேப்போன்று உயிரி எரிபொருளான எத்தனால் கலந்து இயக்கும் எரிபொருளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

இந்த திட்டங்களை துவக்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..  நான் பிரதமர் என்கிற முறையில் நான் எல்லா விஷயத்திற்கும் பெருமையடைய முடியாத நிலை உள்ளது. இந்த திட்டங்கள் 15ஆண்டுகளுக்கு முன்னரே முடிக்க பட்டிருக்க வேண்டும். அப்போது லட்சகணக்கான மக்கள் வேலை வாய்ப்பை பெற்றிருப்பார்கள். கோர்ட் நடவடிக் கைகளால் திட்டங்களை செயல்படுத்துவதில் தடை ஏற்படுகிறது. டெண்டர் நடவடிக் கை, சில எதிர்ப்புபோராட்டங்கள் போன்ற காரணங்களாலும் திட்டங்கள் தாமதமாகின்றன. இதனால்திட்ட செலவினங்கள் அதிக செலவினம் கொண்டதாக இருக்கிறது.

நாட்டின் மேம்பாட்டை பொருத்து, நாம், குடிக்கள், அதிகாரிகள் தொழில் துறையினர், கொள்கை உருவாக்குபவர்கள், திட்டங்களை உரிய நேரத்தில் துவக்குவதற்குரிய கலாச்சாரத்தை துவக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னேற்றத்தை பெற வேண்டும். அதேப்போன்று திட்டத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டும். அதனால் நாடு பயன்களை பெறும். இந்த பயன்கள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாக கிடைக்கும்.திட்ட தாமதம் காரணமாக நாடு பெரும் இழப்பை சந்திக்காமல் இருப்பதற்கு நாம் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்