முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணை தயாரிப்பில் வட கொரியா தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 7 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

சியோல் : வடகொரியா ஒரு டன் எடை கொண்ட செயற்கை கோளுடன் ஒரு ராக் கெட்டை விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கை கோள் ஏவும் திட்டம் நீண்ட தூரம் பாயக்கூடிய அணு ஏவுகணையை வட கொரியா தயாரிப்பதற்கு தயாராக உள்ளதை காட்டுவதாக உள்ளது சர்வதேச நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.  வடகொரியா 4வது அணு ஏவுகணையை சோதனை செய்ததாக நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகளின் கண்டனத்தை பெற்றது.

ஏவுகணை சோதனை திட்டத்தை அமெரிக்கா, அதன் கூட்டாளி நாடான தென் கொரியா ஆகியவை விரும்பவில்லை . இந்த  ஏவுகணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க களத்தை தாக்கக்கூடிய ஒரு ஏவுகணையை வடகொரியா அனுப்பி சோதனை செய்துள்ளது. இந்த தொழில்  நுட்பம் செயற்கை கோளை ஏவும் ராக் கெட் டை அனுப்பும் தொழில் நுட்பத்தை கொண்டதாகும்.

இந்த ராக் கெட் ஏவுதளம் செயற்கை கோளை அனுப்புதற்காக பயன்படுவதாகும். ஆனால் அதே நேரத்தில் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் அது ஏவுகணை திட்டமாக ஆகும் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் எச்சரித்துள்ளன. வடகொரியா தற்போது ஏவியுள்ள ராக்கெட் தனது சுற்று வளையப்பகுதியை அடைவதற்கு 10 நிமிடங்களுக்கு குறைவாக இருந்துள்ளது. இதுவே ஏவுகணையை ஏவுவதாக இருந்தால் வடகொரியாவில் இருந்து அமெரிக்க பகுதியை தாக்குவதற்கு 30நிமிடங்கள் ஆகும் என்று அமெரிக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் வட கொரியா உன்கா -3 என்ற ராக் கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட் 10ஆயிரம் கிலோ மீட்டர்(6ஆயிரத்து 210மைல்) இலக்கை தாக்கக்கூடியதாகும்.இந்த ராக் கெட் அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரையை அடையக்கூடிய வகையில் இருந்தது. அணு ஆயுதங்களை தயாரிப்பதில் வடகொரியாவிற்கு சில தொழில் நுட்ப தடைகள் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வடகொரிய விஞ்ஞானிகள் மிகப்பெரும் செயற்கை கோளையும் பெரும் அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் ராக் கெட்டுகளை தயாரிக்கும் பணியில் இருக்கிறார்கள். ஏவுகணை சோதனைகளை நடத்தும் வடகொரியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபை மேலும் பல தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago