முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் மெகபூபா மவுனம் சாதிக்க முடியாது: உமர் அப்துல்லா

ஞாயிற்றுக்கிழமை, 7 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் (பி.டி.பி) மெகபூபா முப்தி மவுனம் சாதிக்க முடியாது என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா நேற்று கூறினார்.  ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று கூறியிருக்கும் விவரம் வருமாறு,

மெகபூபா தனது மவுனத்தை கலைக்க வேண்டும். மெகபூபா தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அவரது தந்தை முப்தி முகமது சயீத் மறைவுக்கு பின்னர் உடனடியாக மத்திய அரசு நம்பிக் கை மேம்பாடு நடவடிக் கைளை மேற் கொள்ள வேண்டும் என திடீரென்று மெகபூபா கோரிக் கை எழுப்பியுள்ளார். தற்போது ஜம்மு காஷ்மீரில் பாஜக பி.டி.பி கூட்டணி அரசு செயலற்று இருக்கிறது.இந்த இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியை முறித்துக் கொண்டதாக இதுவரை அறிவிக்கவில்லை. இந்த கூட்டணி நீடிக்கும் பட்சத்தில் அரசு ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை.

கடந்த 10 மாதங்களில் என்ன மாற்றம் நடந்து விட்டது. பி.டி.பி கட்சி என்ன நம்பிக் கை மேம்பாடு நடவடிக் கையை எதிர்பார்க்கிறது என்று பாஜகவிற்கு தெரியவில்லை. மெகபூபா தனது கருத்தை தெளிவாக கூற வேண்டும் என்று பாஜக கூறுகிறது. எதற்காக மெகபூபா கால கெடு விதிக்கிறார்.இவ்வாறு உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்