முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்கர் விருது குறித்து கமல் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 7 பெப்ரவரி 2016      சினிமா
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வருடாந்திர இந்தியக் கருத்தரங்கு நடைபெற்றது. அதில், இந்தாண்டு கருத்தரங்கின் முக்கிய கருப்பொருளாக "மாறி வரும் இந்தியா: வாய்ப்புகளும், சவால்களும்' என்பது குறித்து உரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் இந்திய மாநாட்டில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடிகர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் மற்றும் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இவர்களில் கமல் பேச்சுரிமை குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கற்றல் ஆர்வம்... பள்ளிக் கல்வியைகூட முடிக்காதவன் நான் என்பதை உங்களிடையே பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால், கற்றல் என்ற அடிப்படை ஆர்வம் எனக்குள் இருந்ததால் இந்த மேடையில் உங்கள் எதிரில் பேச வந்துள்ளேன்.

ஆஸ்கர் விருது என்பது ஒரு நல்ல அளவுகோல்தான். ஆனால், அதுவே சினிமாவுக்கான உலக அளவிலான மதிப்பீடாகிவிட முடியாது. எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும். தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தில் அல்லாமல், விழிப்புணர்வுடன் இருப்பதற்காகவும், ஜாக்கிரதையாக இருப்பதற்காகவும் அரசியலில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  தென்னிந்தியாவை சேர்ந்த திரைத்துறை பிரபலங்களில் முதன்முறையாக இந்த வாய்ப்பை பெற்றவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்